Home சினிமா சர்ச்சைக்கு நடுவில் அஜித் போட்டோவை வெளியிட்ட யோகி பாபு.. வைரலாகும் பதிவு

சர்ச்சைக்கு நடுவில் அஜித் போட்டோவை வெளியிட்ட யோகி பாபு.. வைரலாகும் பதிவு

0

நடிகர் யோகி பாபு கோலிவுட்டில் முக்கிய காமெடியன்களில் ஒருவர். அவர் தற்போது அஜித், விஜய், ரஜினி என பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடியனாக நடிப்பது மட்டுமின்றி கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வருகிறார்.

ஆனால் நான் ஹீரோ எல்லாம் இல்லை, காமெடியன் மட்டும் தான் என அவர் விளக்கம் கூறி வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் யோகி பாபு மற்றும் ஒரு பிரபல youtube சேனல் இடையே பிரச்சனை வெடித்து இருக்கிறது. அவர்கள் காசு கேட்டதாக யோகி பாபு பேட்டி அளிக்க, அவர்களும் பதிலடி கொடுத்து வீடியோ போட்டிருக்கின்றனர்.

முருக பக்தரான நீங்கள் கோவிலில் வந்து சத்தியம் செய்யுங்க ‘நாங்க காசு கேட்டோம்னு’ என பதில் கொடுத்து இருக்கின்றனர்.

அஜித்

அது மட்டுமின்றி ஒரு நடிகர் தன்னை ‘dont touch’ என சொன்னதாக யோகி பாபு கூறியதாகவும், அது அஜித் தான் என யோகி பாபுவே தன் வாயால் கூறினார் எனவும் அந்த சேனலில் தற்போது சர்ச்சையை கிளப்பி இருக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது யோகி பாபு அஜித் தன்னை போட்டோ எடுக்கும் பழைய போட்டோவை பகிர்ந்து ‘MY FAVOURITE STILL” என குறிப்பிட்டு இருக்கிறார்.

இந்த பதிவு தற்போது வைரலாகி இருக்கிறது. 

NO COMMENTS

Exit mobile version