Home இலங்கை அரசியல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ள மகிந்தவின் மகன்

நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ள மகிந்தவின் மகன்

0

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்ட மஹிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகனான யோஷித ராஜபக்ச இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகனான யோஷித ராஜபக்ச தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பெலியத்த நுழைவாயிலுக்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபர், பணமோசடி சட்டத்தின் கீழ் இன்று (25.01.2025) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றது.

முன்னாள் ஜனாதிபதி 

இவ்வாறு கைது செய்யப்பட்ட யோஷித ராஜபக்ச குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைத்துவரப்பட்டார்.

இதையடுத்து சந்தேகநபரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பின்னர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த  உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ரத்மலானை, சிறிமல் பிரதேசத்தில் அமைந்துள்ள 34 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வீடு மற்றும் காணியை வாங்கியது தொடர்பாக யோஷித ராஜபக்சவை சந்தேகநபராகப் பெயரிட போதுமான ஆதாரங்கள் இருப்பதாக சட்டமா அதிபரால் கடந்த 23ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அறிவித்ததைத் தொடர்ந்து இந்தக் கைது இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/embed/9nKKCMNVbfo

NO COMMENTS

Exit mobile version