முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

காதலன் மீது கொடூரமாக பலமுறை கத்திக்குத்து தாக்குதல் மேற்கொண்ட இளம் காதலி

கம்பளையில் பல வருட காதலை முடிவுக்கு கொண்டுவர முயன்ற காதலனை கத்தியால் குத்தி காயப்படுத்திய காதலி எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

19 வயதுடைய சந்தேகநபரை காதலி கம்பளை பதில் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்த இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த யுவதி கம்பளையில் மீன் வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் 22 வயதுடைய ஒருவருடன் பல வருடங்களாக காதல் உறவில் ஈடுபட்டுள்ளார்.

காதலால் மோதல்

சில நாட்களாக காதலன் தன்னை தவிர்ப்பதை அறிந்த இளம்பெண் இது குறித்து காதலனிடம் கேட்க முடிவு செய்துள்ளார்.

காதலன் தனது முடிவை மாற்றிக் கொள்ள மாட்டேன் என்று கூறியதும், காதலனை வேறு பெண்ணை காதலிக்க கூடாது என எண்ணி அவர்கள் இருவரும் இருக்கும் புகைப்படத்தை அந்த யுவதி தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த செயலால் ஆத்திரமடைந்த காதலன், அந்த புகைப்படத்தை பேஸ்புக் பக்கத்தில் இருந்து நீக்கிவிட்டு காதலியை தாக்கியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காதலன் மீது தாக்குதல்

பின்னர் குறித்த காதலனை சந்திப்பதற்காக காதலியின் தாயும் சகோதரனும் கம்பளை பொதுச்சந்தைக்கு வந்துள்ளனர். ​​காதலியின் சகோதரனை காதலன் தாக்கியதில், படுகாயமடைந்த சகோதரர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

எனினும் குறித்த இடத்தில் இருந்த காதலி மறைத்து வைத்திருந்த கத்தியால் காதலனை பல தடவைகள் குத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அப்போது கடைக்கு அருகில் இருந்த பலர் அந்த இளம் பெண்ணை கட்டுப்படுத்தி, கத்திக்குத்து தாக்குதலில் படுகாயம் அடைந்த காதலனை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் சந்தேக நபரான காதலி கம்பளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்