Home இலங்கை சமூகம் யாழில் திருமணமாகி ஒரு மாதமே கடந்த நபர் மாரடைப்பால் மரணம்!

யாழில் திருமணமாகி ஒரு மாதமே கடந்த நபர் மாரடைப்பால் மரணம்!

0

யாழ்ப்பாணத்தில் திருமணமாகி ஒரு மாதமே நிறைவடைந்த நபர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.

சுழிபுரம் – பெரியபுலோ மேற்கு பகுதியைச்
சேர்ந்த பரஞ்சோதி ததீஸ்கரன் (வயது 29) என்ற இளம் குடும்பஸ்தரே இவ்வாறு
உயிரிழந்துள்ளார்.

குறித்த நபருக்கு கடந்த 09.04.2025 அன்று திருமணம் நடைபெற்றுள்ளது.

மரண விசாரணை

இந்நிலையில்
தம்பதிகள் இருவரும் உறவினர் ஒருவரின் வீட்டிற்கு சென்று திருமண
விருந்து உண்டுவிட்டு வீடு வந்தவேளை வாந்தி ஏற்பட்டுள்ளது.

இதன்போது, வைத்தியர்
ஒருவரிடம் சிகிச்சை பெற்றும் வாந்தி குணமாகாத நிலையில் பின்னர் சங்கானை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இருப்பினும், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், அவரது சடலம்
மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரிகள் மேற்கொண்டுள்ள நிலையில் மாரடைப்பு காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில்
தெரியவந்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version