Home இலங்கை சமூகம் பொலன்னறுவையில் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்: விசாரணையில் வெளியான தகவல்

பொலன்னறுவையில் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்: விசாரணையில் வெளியான தகவல்

0

பொலன்னறுவை, வெலிகந்த, நாமல்கம கிராமத்தில் வீடொன்றில் இருந்து வயல்வெளிக்கு சட்டவிரோதமாக இழுக்கப்பட்ட மின்சார கம்பியில் சிக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெலிகந்த பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இலக்கம் 187 நாமல்கம, வெலிகந்த என்ற முகவரியில் வசித்து வந்த ஏ.எம். தனுகா என்ற 19 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சட்டவிரோத மின்சாரம்

சம்பவத்தில் உயிரிழந்த இளைஞன் இதய நோயால் பாதிக்கப்பட்டவர் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் இருவருடன் வயலுக்குச் சென்று கொண்டிருந்த போது, ​​வயல்வெளியில் சட்டவிரோதமாக இழுக்கப்பட்டிருந்த மின்சார கம்பிகளில் சிக்கி உயிரிழந்துள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் வெலிகந்த பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Source: https://tamilwin.com/article/young-man-died-tragically-due-to-electric-shock-1718198240

NO COMMENTS

Exit mobile version