தேங்காய் பறிக்க தென்னை மரத்தில் ஏறிய இளைஞன் தவறி விழுந்து
உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் அம்பாறை(ampara) மாவட்டம் நிந்தவூர் காவல்துறை
பிரிவிற்குட்பட்ட புறநகர் பிரதேசத்தில் இன்று(12) இடம்பெற்றுள்ளது.
நிந்தவூர்-8
அல்மினன் வீதியைச் சேர்ந்த 25 வயதுடைய முஹமட் அன்சார் முகமட்
ஆசாத் என்ற இளைஞனே சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.
கால் வழுக்கியதால் ஏற்பட்ட விபரீதம்
உயரமான தென்னை மரத்தில் ஏறி தேங்காய்களை பறிக்கும் போது தென்னை மரத்தின்
காய்ந்த ஓலையொன்றைப் பிடித்தபோது கால் வழுக்கி சுவரில் விழுந்ததில் குறித்த
நபர் உயிரிழந்துள்ளார்.
நிந்தவூர் காவல்துறையினர் விசாரணை
இந்த சம்பவம் தொடர்பில் நிந்தவூர் காவல்துறையினர் விசாரணைகளை
முன்னெடுத்துள்ளதுடன் சடலம் நிந்தவூர் ஆதார வைத்தியசாலைக்கு பிரேத
பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டிருந்தது.
சடலத்தின்
மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி அப்துல் ஹமீட் அல் ஜவாஹீர்
மேற்கொண்டுள்ளதுடன் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
