Home இலங்கை குற்றம் முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் இளைஞர் கைது

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் இளைஞர் கைது

0

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூங்கிலாறு தெற்கு
உடையார்கட்டு பகுதியில் வீட்டில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

புதுக்குடியிருப்பு விசேட புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கபெற்ற இரகசிய
தகவலையடுத்து நேற்றையதினம்(02.11.2025) விஷேட சோதனை நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டது.

மேலதிக விசாரணை

அச்சோதனையின் போது குறித்த வீட்டில் இருந்து 1 கிலோகிராம் 250 கிராம்
கஞ்சாவும் இரண்டு வாள்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதனுடன்
தொடர்புடையதாக 24 வயதுடைய இளைஞன் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த இளைஞனுக்கு ஏற்கனவே கஞ்சா தொடர்பான வழக்குகள் இருப்பதாகவும், ஆரம்ப
விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட இளைஞனையும் மீட்கப்பட்ட கஞ்சா பொதியையும்
முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாகவும். இது தொடர்பான
மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version