Home இலங்கை சமூகம் யாழில் கணவன் தாக்கியதால் இளம் தாய் எடுத்த விபரீத முடிவு

யாழில் கணவன் தாக்கியதால் இளம் தாய் எடுத்த விபரீத முடிவு

0

யாழில் கணவன் தாக்கியதால் மனவிரக்தியடைந்த இளம் தாய் ஒருவர் தவறான
முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார்.

இதன்போது, கட்டுடை, அரசடி வீதி பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய 4 மாத குழந்தையின் தாயே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாடு
காரணமாக கணவன் அவரை தாக்கியுள்ளார்.

மனவிரக்தியில் எடுத்த முடிவு

இதனால் மனவிரக்தியடைந்த குறித்த பெண் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம்
மேற்கொண்டுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version