Home இலங்கை சமூகம் யாழில் மூச்செடுக்க சிரமப்பட்ட யுவதிக்கு நேர்ந்த விபரீதம்

யாழில் மூச்செடுக்க சிரமப்பட்ட யுவதிக்கு நேர்ந்த விபரீதம்

0

யாழில் மூச்செடுக்க சிரமப்பட்ட யுவதி ஒருவர் இன்று (11.09.2025) உயிரிழந்துள்ளார்.

இருபாலை, கோப்பாய் கிழக்கு என்ற முகவரியை சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அதன்படி, இன்றையதினம் அதிகாலை 2 மணியளவில் குறித்த பெண் மூச்செடுப்பதற்கு சிரமப்பட்டுள்ளார்.

உடற்கூற்று பரிசோதனை

இந்நிலையில், வைத்தியசாலைக்கு அழைத்து செல்வதற்கு முன்னர் குறித்த யுவதி உயிரிழந்துள்ளார்.

பின்னர் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலத்தை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version