1400 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளை விற்பனை செய்வதற்காக தனது உடமையில்
வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கிண்ணியா பிரதேசத்தை சேர்ந்த 24 வயதான இளைஞரே கைது செய்யப்பட்டுள்ளார்.
இரகசிய தகவலின் அடிப்படையில் சிக்கிய சந்தேகநபர்
கிண்ணியா – வான்எல பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற, இரகசிய
தகவலின் அடிப்படையில், வான்எல பகுதியில் வைத்து சந்தேக நபர் கைது
செய்யப்பட்டுள்ளதாக வான்எல குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி
தெரிவித்தார்.
மேலதிக நடவடிக்கைகளுக்காக, சந்தேகநபரை இன்றைய தினம் திருகோணமலை நீதவான்
நீதிமன்றத்தில்
முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் பொறுப்பதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.
