Home இலங்கை குற்றம் போதைப்பொருளுடன் கைதான இளைஞனிடம் விசாரணை முன்னெடுப்பு

போதைப்பொருளுடன் கைதான இளைஞனிடம் விசாரணை முன்னெடுப்பு

0

ஐஸ் போதைப்பொருள் தம் வசம் வைத்திருந்த இளைஞனை கைது செய்து, சம்மாந்துறை
பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

நேற்று (13) இரவு கிடைக்கப்பெற்ற இரகசியத்தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட
சோதனை நடவடிக்கையின் போது 18 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை

இவ்வாறு
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து ஒரு தொகை ஐஸ் போதைப்பொருள்
மீட்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர் உள்ளிட்ட சான்றும் பொருட்களை சட்ட
நடவடிக்கைக்காக சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான
நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Source: https://tamilwin.com/article/youth-arrested-with-drugs-questioned-1736850046

NO COMMENTS

Exit mobile version