முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிகரிக்கும் இளவயது மரணங்கள்

முல்லைத்தீவு மாவட்டத்தில் சில நாட்களாக இளவயது மரணங்கள் அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர்
பிரிவுக்குட்ப்பட்ட இரணைப்பாலை கிராமத்தில் 12.02.2024 நேற்று பாடசாலை மாணவி
ஒருவர் தவறான முடிவினை எடுத்ததினால் உயிரிழந்த நிலையில் புதுக்குடியிருப்பு
ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

புதுக்குடியிருப்பு இரணைப்பாலை பகுதியில் வசிக்கும் 18 வயது பூர்த்தியாகாத
உயர்தர வகுப்பு மாணவியான நிதர்சினி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிகரிக்கும் இளவயது மரணங்கள் | Youth Deaths Rise In Mullaitivu District

வீட்டில் பெற்றோர்கள் மற்றும்
உறவினர்கள் இல்லாத நிலையில் குறித்த மாணவி தனது அறைக்குள் தற்கொலை செய்துள்ளார்.

இருப்பினும் வீட்டிற்கு வந்த தாய் தந்தையர் மகளை மீட்டு புதுக்குடியிருப்பு ஆதார
வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும் அங்கு அவர் உயிரிழந்துள்ளதாக
வைத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சமூக ஆர்வலர்கள் கவலை

இந்த உயிரிழப்பு தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை
மேற்கொண்டு வருகின்ற நிலையில் மருத்துவ பரிசோதனைகளுக்காக உடலம் முல்லைத்தீவு
மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிகரிக்கும் இளவயது மரணங்கள் | Youth Deaths Rise In Mullaitivu District

இளைஞர் ஒருவரை காதல் செய்துவந்த குறித்த யுவதி தனது காதலனுடன் தொலைபேசியில்
உரையாடிக்கொண்டிருந்த நிலையிலேயே இந்த முடிவை எடுத்துள்ளதாக
தெரிவிக்கப்படுகிறது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் அண்மைய காலங்களில் இளவயது மரணங்கள் தற்கொலைகள்
தற்கொலை முயற்சிகள் தொடர்பில் சமூக ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

ஒரு சில தினங்களுக்கு முன்னரும் புதுக்குடியிருப்பு பகுதியில் ஒரு சிறுமி
தற்கொலைக்கு முயற்சித்து உறவினர்களால் காப்பாற்றப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிகரிக்கும் இளவயது மரணங்கள் | Youth Deaths Rise In Mullaitivu District

முன்னைய காலத்தில் கலாச்சாரம் மிக்க சமூகமாக இருந்த தமிழ் சமூகத்தில்
போதைப்பொருள் பாவனை உள்ளிட்ட பல்வேறு சமூக சீர்கேட்டு சம்பவங்கள் சிறுவர்களை
இளவயதினரை வெகுவாக பாதித்துள்ளது.

எந்த ஒரு பிரச்சினைக்கும் தற்கொலை தீர்வல்ல பெற்றோர்கள் சிறுவர்கள் மீது அதிக
கவனம் செலுத்த வேண்டும்

குறிப்பாக சிறுவர்களின் தொலைபேசி பாவனை என்பது தற்போது
பல்வேறு பிரச்சனைகளுக்கு வழி வகுக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

நாட்டை உலுக்கிய அட்டலுகம சிறுமியின் மரணம் : இரண்டு வருடங்களின்பின் நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு

நாட்டை உலுக்கிய அட்டலுகம சிறுமியின் மரணம் : இரண்டு வருடங்களின்பின் நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு

கருணாவின் ஈச்சையடி பண்ணையில் இரு சடலங்கள் மீட்பு

கருணாவின் ஈச்சையடி பண்ணையில் இரு சடலங்கள் மீட்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்