Home இலங்கை சமூகம் யாழில் அதீத போதைப்பொருள் பாவனையால் இளைஞர் ஒருவர் உயிரிழப்பு..!

யாழில் அதீத போதைப்பொருள் பாவனையால் இளைஞர் ஒருவர் உயிரிழப்பு..!

0

யாழ்ப்பாணத்தில் (Jaffna) ஹெரோயின் போதைப்பொருளை அதிகளவில் உள்ளெடுத்த இளைஞர் ஒருவர்
உயிரிழந்துள்ளார்.

யாழ். உரும்பிராயில் நேற்றுமுன்தினம் (29) இரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த இளைஞர் ஹெரோயின் போதைப்பொருளுக்கு அடிமையாக இருந்த நிலையில்,  சிறிது காலம்
திருந்தி வாழ்ந்த அவர் நேற்றுமுன்தினம் நண்பர்களுடன் சேர்ந்து ஹெரோயினை
உள்ளெடுத்துள்ளார்.

மேலதிக விசாரணை

இதையடுத்து வாயிலிருந்து நுரைதள்ளிய நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

அதிக ஹெரோயின் உட்கொண்டதே மரணத்துக்குக் காரணம் என்று பிரேத பரிசோதனையில்
தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Source: https://tamilwin.com/article/youth-dies-in-jaffna-due-to-excessive-use-drugs-1730368227

NO COMMENTS

Exit mobile version