Home இலங்கை குற்றம் நுவரெலியாவில் போதைப்பொருள் வைத்திருந்த இளைஞனுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

நுவரெலியாவில் போதைப்பொருள் வைத்திருந்த இளைஞனுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

0

நுவரெலியா பொலிஸ் ஊழல் ஒழிப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட
சிறப்பு தேடுதலின் போது நுவரெலியா உடப்புசல்லாவ அனிக் பகுதியைச் சேர்ந்த 31
வயதுடைய போதைப்பொருள் வியாபாரி எனக் கூறும் இளைஞர் ஒருவரை கைது செய்து பொலிஸ்
காவலில் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொள்ள உத்தரவு பெறப்பட்டுள்ளதாக
பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம்
2270 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும் 33.8 மில்லிகிராம் கஞ்சா போதைப்பொருளும்
போதைப்பொருள் வர்த்தகம் ஊடாக அவர்கள் ஈட்டிய ஒரு இலட்சம் ரூபாய் பணமும்
கைப்பற்றப்பட்டுள்ளது.

தடுப்புக்காவலுக்கு உத்தரவு

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நேற்று (11) செவ்வாய்க்கிழமை வலப்பனை
நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு ஐந்து நாட்கள் தடுப்புக்காவலுக்கு
உத்தரவு பெறப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் நுவரெலியா பொலிஸ் நிலைய ஊழல் ஒழிப்பு
பிரிவு பொறுப்பதிகாரி தலைமையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

NO COMMENTS

Exit mobile version