அவுஸ்திரேலியா 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான உலகின் முதல் சமூக ஊடகத் தடையில் YouTube யும் சேர்க்கவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்படி ரிக்ரொக், பேஸ்புக் (Face book), ஸ்னாப்சாட், ரெடிட், எக்ஸ் (X) மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களுக்குத் முன்னதாக தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது யூடியூப் தளமும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இந்தத் தடை டிசம்பரில் நடைமுறைக்கு வர உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
50 மில்லியன் அபராதம்
அந்தவகையில், இளைஞர்கள் YouTube வீடியோக்களைப் பார்க்கலாம், ஆனால் உள்ளடக்கம் பதிவேற்றவோ, கணக்கு வைத்து தொடர்பு கொள்ளவோ முடியாது.
தடை உத்தரவு நடைமுறைக்கு வந்ததும், அதனை மீறும் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு எதிராக 50 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்கள் அபராதமாக விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் உள்ள தகவல்கள் சிறுவர்களின் மன ஆரோக்கியத்தில் தாக்கங்களை ஏற்படுத்துவதாகவும், அது தீங்கு விளைவிப்பதாகவும் அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.