Home இலங்கை சமூகம் உலகமெங்கும் யாழ் மக்களை பார்க்கிறேன்: பாடகர் ஶ்ரீனிவாஸ் புகழாரம்!

உலகமெங்கும் யாழ் மக்களை பார்க்கிறேன்: பாடகர் ஶ்ரீனிவாஸ் புகழாரம்!

0

உலகத்தின் எந்த நாட்டிற்கு சென்றாலும் யாழ்ப்பாண மக்களைப் பார்க்கின்றோம் என தென்னிந்திய திரைப்படப் பாடகர் ஶ்ரீனிவாஸ் (Srinivas)   தெரிவித்துள்ளார்.

ஐபிசி தமிழுக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ” சீ தமிழ் சரிகம போட்டி நிகழ்ச்சியில் இலங்கையின் உள்ளூர் கலைஞர்கள் பங்குபற்றியிருக்கின்றார்கள்.

யாழ்ப்பாணத்தில் இருந்து தரங்கினி என்ற பெண் மிக அருமையாக பாடுவார், அம்பாறை மாவட்டத்தின் விநாயகபுரத்தில் இருந்து சபேசன் என்ற போட்டியாளர் மிக அருமையாக பாடுவார்.

அதற்கு முதல் கில்மிஷா பங்குபற்றியிருந்ததுடன் மலையகத்தில் இருந்து அசானியும் பங்குபற்றியிருந்தார். இந்தமுறை மலையகத்தில் இருந்து சினேகா என்ற போட்டியாளர் பங்குபற்றியிருந்தார்.

இவர்களை மாதிரி நியை கலைஞர்கள் வரும் போது அவர்கள் நன்றாக பாடும் போது இன்னும் மகிழ்ச்சியாக இருக்கின்றது.

இந்தியாவின் இசைக்கலைஞர்களுக்கு நிகராக இலங்கைக் கலைஞர்கள் பாடுகின்றார்கள் என்பது தான் மிக்க மகிழ்ச்சி.” என தெரிவித்தார்.

இது குறித்த மேலும் பல விடயங்களை கீழுள்ள காணொளியில் காண்க……..

https://www.youtube.com/embed/DS7a68Fskbg

NO COMMENTS

Exit mobile version