Home இலங்கை யாழில் மோட்டார் சைக்கிளும் காரும் மோதி விபத்து: இளம் பொறியியலாளர் உயிரிழப்பு

யாழில் மோட்டார் சைக்கிளும் காரும் மோதி விபத்து: இளம் பொறியியலாளர் உயிரிழப்பு

0
image

யாழ்ப்பாணம், நல்லூர் குறுக்குத் தெரு சந்திப்பில் நேற்று (22) இரவு இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மற்றும் கார் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இந்த விபத்து நேற்று இரவு சுமார் 11.20 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளம் பொறியியலாளர் கந்தசாமி கோகுலதாஸ் உயிரிழந்துள்ளார். அவருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த சஞ்சீவன் என்பவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தில் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகிய இரு வாகனங்களும் சேதமடைந்துள்ளன. சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் காரின் முன்பகுதியும் மோட்டார் சைக்கிளும் கடுமையாக சேதமடைந்துள்ளமை காணப்படுகிறது.

விபத்து இடம்பெற்ற போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் தலைக்கவசம் அணியாமல் பயணித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Source: https://samugammedia.com/accident-in-jaffna-motorcycle-and-car-collide-young-engineer-dies-1787551565

NO COMMENTS

Exit mobile version