Home இலங்கை இலங்கைத் தமிழ் சினிமாவில் புதிய மைல்கல் – அந்தோனி திரைப்படம் ஒஸ்கார் பயணத்தில்

இலங்கைத் தமிழ் சினிமாவில் புதிய மைல்கல் – அந்தோனி திரைப்படம் ஒஸ்கார் பயணத்தில்

0

இலங்கைத் தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றைப் படைத்துள்ள ‘அந்தோனி’ திரைப்படம், 2027ஆம் ஆண்டுக்கான ஒஸ்கார் விருது விழாவின் சிறந்த சர்வதேச திரைப்படப் பிரிவிற்கான தேர்வுப் பயணத்தைத் தொடங்கியுள்ளது.

இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவான வரலாற்றுச் சிறப்புமிக்க இலங்கைத் தமிழ்த் திரைப்படம் என்ற பெருமையை ‘அந்தோனி’ பெற்றுள்ளது.

அந்தோனி திரைப்படம்

கலைவளரி சக இரமணதாஸ் மற்றும் சுகந்தினி இரமணதாஸ் ஆகியோரின் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் கயல் வின்சன்ட், TJ. பானு, சுதர்சன் ரவீந்திரன், செளமி முனசிங்க, நிழல்கள் ரவி, அருள்தாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

சுகிர்தன் கிறிஸ்துராஜா மற்றும் ஜெனோசன் ராஜேஸ்வர் ஆகியோர் இயக்கியுள்ள ‘அந்தோனி’ திரைப்படம் மூன்று மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ளது.

அண்மையில் உலகெங்கும் திரையரங்குகளில் வெளியான இப்படம், ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஒஸ்கார் விருது

திரையரங்கு வெளியீட்டைத் தொடர்ந்து, இந்தியாவில் Amazon Prime Video, OTT Plus, Shortflix, Tentkotta, Roopahala உள்ளிட்ட முன்னணி OTT தளங்களிலும் இப்படம் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், ‘அந்தோனி’ திரைப்படம் இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் ஊடாக 2027ஆம் ஆண்டுக்கான ஒஸ்கார் விருதின் சிறந்த சர்வதேச திரைப்படப் பிரிவிற்கான தேர்வுக் குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவான முதல் இலங்கைத் தமிழ் திரைப்படம் என்ற வரலாற்றுப் பெருமையுடன், சர்வதேச அரங்கில் கவனம் பெற்றுள்ள ‘அந்தோனி’, ஆஸ்கார் தேர்வுப் பயணத்தில் மேலும் பல அங்கீகாரங்களைப் பெறும் என்ற எதிர்பார்ப்பு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் உருவாகியுள்ளது.

Source: https://tamilwin.com/article/anthony-in-sri-lanka-oscar-selection-race-1789993855

NO COMMENTS

Exit mobile version