Home முக்கியச் செய்திகள் இஸ்ரேல் விமான தாக்குதலில் மயிரிழையில் தப்பிய முக்கிய பிரமுகர் :வெளியான பரபரப்பு காணொளி

இஸ்ரேல் விமான தாக்குதலில் மயிரிழையில் தப்பிய முக்கிய பிரமுகர் :வெளியான பரபரப்பு காணொளி

0

கைது செய்யப்பட்ட ஐநா ஊழியர்களை விடுவிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தவும், ஏமனில்(yemen) சுகாதார மற்றும் மனிதாபிமான நிலைமையை மதிப்பிடுவதற்கும் உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ்(Tedros Adhanom Ghebreyesus) தலைமையிலான குழு ஏமன் சென்றது.பணிகளை முடித்து நேற்று சனாவில் இவர்கள் விமானம் ஏற இருந்தபோது அங்கு இஸ்ரேல்(israel) வான்வழித் தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் உட்படட்ட குழுவினர் மயிரிழையில் உயிர் தப்பிய காணொளி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிரிழையில் உயிர் தப்பிய காணொளி

இது தொடர்பாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் தெரிவிக்கையில்,

எங்கள் விமானத்தின் பணியாளர் ஒருவர் இதில் காயமடைந்தார். மேலும் விமான நிலையத்தில் 2 பேர் தாக்குதலில் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு கோபுரம், புறப்படும் இடம், ஓடுபாதை சேதமடைந்தன.

நாங்கள் இருந்த இடத்திலிருந்து சில மீட்டர் தொலைவில் உள்ள இடமும் சேதமடைந்தது. நானும் என்னுடன் இருந்த ஐநா மற்றும் உலக சுகாதர அமைப்பு அதிகாரிகளும் பாதுகாப்பாக உள்ளோம். என்று அவர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்தார்.

இந்நிலையில் தாக்குதல் நடந்தபோது தாங்கள் நூலிழையில் தப்பிய பரபரப்பூட்டும் காணொளியை டெட்ரோஸ் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version