Home இலங்கை சம்பூரில் தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல்

சம்பூரில் தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல்

0
image

தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, ஆறாம் நாள் நினைவேந்தல் நிகழ்வு திருகோணமலை மாவட்டத்தின் சம்பூர் பகுதியில் இன்று (21) திங்கட்கிழமை மாலை இடம்பெற்றது.

இதன்போது பிரதான சுடர் ஏற்றப்பட்டதுடன், தியாக தீபம் திலீபனின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டது.

தொடர்ந்து விளக்கேற்றி, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

திருகோணமலை நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு நினைவஞ்சலி செலுத்தினர்.

Source: https://samugammedia.com/39th-annual-commemoration-of-thyaga-deepam-thileepan-in-sampur-1789996803

NO COMMENTS

Exit mobile version