Home இலங்கை அதிக சத்தம் எழுப்பும் வாகனங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை

அதிக சத்தம் எழுப்பும் வாகனங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை

0

பொது வீதிகளில் அதிக சத்தத்தை எழுப்பும் வகையில் மாற்றியமைக்கப்பட்ட சைலன்சர்களைப்  பொருத்தி வாகனங்களை ஓட்டும் சாரதிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

 

இவ்வாறு அதிக சத்தத்தை எழுப்பும் வாகனங்களை பொலிஸார் கையகப்படுத்துவார்கள் என  பொலிஸ் போக்குவரத்து மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவின் தலைவர், பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார்.

இவ்வாறான வாகனங்களை ஓட்டும் சாரதிகள் எதிர்காலத்தில் போதைப்பொருள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சம்பந்தப்பட்ட வாகனங்கள் குறித்து மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்திடம் இருந்து அறிக்கை பெறப்பட்டு, அதன் பின்னர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என பிரதிப் பொலிஸ் மா அதிபர் சேனாதீர மேலும் தெரிவித்துள்ளார்.

 

மக்கள் தங்களது தனிப்பட்ட பயன்பாட்டிற்குப் பதிலாக, சாகசங்கள் மற்றும் ஏனைய செயற்பாடுகளுக்காக மோட்டார் சைக்கிள்களை வாங்குவதைக் அதிகம் காண முடிகிறது. குறிப்பாக பண்டிகைக் காலங்களில் மோட்டார் சைக்கிள்கள் மற்றும்  முச்சக்கர வண்டிகள் இவ்வாறு மாற்றியமைக்கப்பட்ட சைலன்சர்கள் பொருத்தப்பட்டு, பொதுமக்களுக்கு பெரும் இடையூறு விளைவிக்கப்படுகின்றன என  அவர் குறிப்பிட்டுள்ளார்.  

Source: https://samugammedia.com/strict-action-against-vehicles-that-make-too-much-noise-1781260999

NO COMMENTS

Exit mobile version