இலங்கையில் மின்சாரக் கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த மாற்றத்தின் படி, எதிர்வரும் திங்கட்கிழமை (11) முதல் குறைந்த மின்சாரத்தை நுகர்வோருக்கு சலுகைகளும், அதிக மின்சாரத்தை பயன்படுத்துவோருக்கு கட்டண அதிகரிப்பும் அமலுக்கு வரவுள்ளன.
முக்கிய அம்சங்கள்:
180 அலகுகளுக்கு கீழ்: 180 அலகுகளுக்கு குறைவாக மின்சாரத்தை பயன்படுத்தும் நுகர்வோருக்கு கட்டண அதிகரிப்பு ஏற்படாது.
180 அலகுகளுக்கு மேல் மின்சாரத்தை பயன்படுத்துவோருக்கு சுமார் 18% வரை கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.
புதிய கட்டண விபரங்கள் (மதிப்பீடு):
மின்சார பயன்பாட்டு அலகுகளுக்கு ஏற்ப அதிகரிக்கப்படவுள்ள மேலதிக கட்டண விபரங்கள் பின்வருமாறு:
மின்சார அலகு (Units)மதிப்பிடப்பட்ட மேலதிக கட்டணம்
180 – 210ரூ. 1,760
210 – 240ரூ. 2,210
270 க்கு மேல் ரூ. 2,600
300 க்கு மேல் ரூ. 3,110
கஇந்த கட்டண விபரங்கள் நுகர்வோர் பயன்படுத்தும் மேலதிக அலகுகளைப் பொறுத்து மாறுபடலாம்.
