Home இலங்கை அம்பாறையில் அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதிய கார் – பெண் தூக்கி வீசப்பட்டு படுகாயம்

அம்பாறையில் அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதிய கார் – பெண் தூக்கி வீசப்பட்டு படுகாயம்

0
image

அம்பாறை ரீகல் சந்திப்பில் நேற்று மாலை இடம்பெற்ற கோர விபத்தில் பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் அம்பாறை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ரீகல் தெரு சந்திப்புப் பகுதியில் அதிவேகமாக வந்த வாகனம் ஒன்று  திடீரென கட்டுப்பாட்டை இழந்து வீதியோரம் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்  மற்றும் கார் மீது பலமாக மோதியுள்ளது.

இதன்போது, அப்பகுதியில் நின்றுகொண்டிருந்த பெண் ஒருவர் மீதும் வாகனம் மோதியதில் அவர் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார்.

அத்துடன், வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த வேன் ஒன்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் இந்த மோதலில் பலத்த சேதமடைந்துள்ளன.

காயமடைந்த பெண் உடனடியாக மீட்கப்பட்டு அம்பாறை பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Source: https://samugammedia.com/car-crashes-into-vehicles-one-after-another-on-the-flyover—woman-thrown-out-and-injured-1785300225

NO COMMENTS

Exit mobile version