Home இலங்கை அம்பாறையில் தங்குமிடத்தின் மறைவில் இயங்கிய விபச்சார விடுதி முற்றுகை – இருவர் கைது

அம்பாறையில் தங்குமிடத்தின் மறைவில் இயங்கிய விபச்சார விடுதி முற்றுகை – இருவர் கைது

0
image

அம்பாறை நகரில் தங்குமிடம் ஒன்றின் மறைவில் ரகசியமாக இயங்கி வந்ததாகக் கூறப்படும் விபச்சார விடுதியொன்றை குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் பொலிஸாரும் இணைந்து சுற்றிவளைத்துள்ளனர்.

இந்த சுற்றிவளைப்பின்போது விடுதியின் முகாமையாளராகப் பணியாற்றிய நபர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அம்பாறை தலைமையகப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், உளவாளர் ஒருவரைப் பயன்படுத்தி பொலிஸார் திட்டமிட்ட பொறி நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர். இதன்போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட விடுதி முகாமையாளர் அக்கரைப்பற்று பகுதியைச் சேர்ந்தவர் எனவும், அவருடன் கைது செய்யப்பட்ட பெண் கண்டி மாவட்டத்தைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட இருவரையும் அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான முதற்கட்ட சட்ட நடவடிக்கைகளை அம்பாறை தலைமையகப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Source: https://samugammedia.com/raid-on-the-illegal-gambling-den-operating-in-the-absence-of-accommodation-at-the-fair–two-arrested-1785042603

NO COMMENTS

Exit mobile version