Home இலங்கை இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கை விஜயம் – கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கை விஜயம் – கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்

0
image

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (08) இலங்கைக்கு வரவுள்ளார்.

பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் வெளியுறவு அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள் அடங்கிய உயர்மட்டக் குழுவினரும் அவருடன் இலங்கைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜ்நாத் சிங்கின் இந்த விஜயம் இன்று முதல் எதிர்வரும் 10ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதே இந்த விஜயத்தின் பிரதான நோக்கமாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

விஜயத்தின் போது இந்திய பாதுகாப்பு அமைச்சர், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சம்பத் துயகொந்த உள்ளிட்ட முக்கியஸ்தர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

கடந்த ஆண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் போது கையொப்பமிடப்பட்ட இந்தியா–இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலும் இந்த விஜயத்தின் போது மதிப்பாய்வு செய்யப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் 38 ஆண்டுகளுக்குப் பின்னர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வது இந்தப் பயணத்தின் முக்கிய அம்சமாகக் கருதப்படுகிறது.

இதேவேளை, ராஜ்நாத் சிங்கின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு கொழும்பு நகரைச் சுற்றி விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு போக்குவரத்துப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, இந்திய பாதுகாப்பு அமைச்சர் பயணிக்கும் நேரங்களில் கொழும்பு நகரின் பல முக்கிய வீதிகளில் சந்தர்ப்பத்திற்கு ஏற்ப போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: https://samugammedia.com/indian-defense-minister-rajnath-singhs-visit-to-sri-lanka–special-traffic-plan-in-colombo-1788833542

NO COMMENTS

Exit mobile version