Home இலங்கை இயக்குநர் பாரதிராஜாவிற்கு கரவெட்டியில் நினைவஞ்சலி!

இயக்குநர் பாரதிராஜாவிற்கு கரவெட்டியில் நினைவஞ்சலி!

0
image

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான ‘இயக்குனர் சிகரம்’ பாரதிராஜா அவர்களுக்கு கரவெட்டி கிழக்கு சிவனேசன் பொது நோக்கு மண்டபத்தில் உணர்வுபூர்வமான நினைவஞ்சலி கூட்டம் நடைபெற்றது.

சிவனேசன் பொது நோக்கு மண்டப தலைவரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பலரும் கலந்து கொண்டு அன்னாரது கலைச்சேவையையும் நினைவுகளையும் பகிர்ந்து கொண்டனர்.

நிகழ்வின் தொடக்கமாக ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் திரு. வேந்தன் அவர்கள் ஈகைச்சுடரேற்றி, பாரதிராஜாவின் திருவுருவப் படத்திற்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து, சிவனேசன் பொது நோக்கு மண்டப உறுப்பினர்கள் மற்றும் கழக உறுப்பினர்கள் அனைவரும் மலர் தூவி தமது அஞ்சலியைச் செலுத்தினர்.

நிகழ்வில் சிறப்புரை ஆற்றிய ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் திரு. வேந்தன் அவர்கள், இயக்குனர் சிகரம் பாரதிராஜாவின் திரைத்துறைப் பங்களிப்புகள் மற்றும் அவரது கலைப்பயணம் குறித்த நெகிழ்ச்சியான நினைவுரையை ஆற்றினார்.

இக்கூட்டத்தில் கலை ஆர்வலர்கள், பொதுமக்கள் மற்றும் கழகப் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்துகொண்டு தங்களின் இறுதி மரியாதையைச் செலுத்தினர்

Source: https://samugammedia.com/tribute-to-director-bharathiraja-in-karavetti-1781513489

NO COMMENTS

Exit mobile version