Home இலங்கை இரு வேறு குற்றச்சாட்டில் மூன்று சந்தேக நபர்கள் கைது !

இரு வேறு குற்றச்சாட்டில் மூன்று சந்தேக நபர்கள் கைது !

0
image

தர்மபுரம்  பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கணைப் பகுதியில் இரு வேறு குற்றச்சாட்டில் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

புளியம்பொக்கணைப் பகுதியில் இன்று  (29) அதிகாலை  பொலிஸாரால் வீதிச் சோதனை  மேற்கொள்ளப்பட்டது. 

வீதி சோதனை மூலம் விசுவமடு பகுதியில் இருந்து  அனுமதி இன்றி மரங்களை  வெட்டி யாழ்ப்பாணம்   கொண்டு  சென்ற  இரண்டு கப்ரக வாகனம் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டது. 

அதேபோன்று புளியம்பொக்கணைப் பகுதியில் இருந்து சட்டவிரோதமான முறையில் அனுமதிப்பத்திரம் இன்றி மணல் ஏற்றி பயணித்த டிப்பர் வாகனம் ஒன்றினனையும் பொலிசார் பறி முதல்  செய்தனர். 

 குறித்த சம்பவத்தின் தொடர்புடைய சந்தேக நபர்களையும் ,தடயப் பொருட்களையும்  நீதிமன்றில்  முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுர பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Source: https://samugammedia.com/three-suspects-arrested-in-connection-with-two-separate-charges-1782726461

NO COMMENTS

Exit mobile version