Home இலங்கை இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 40 ஆயிரம் சிகரெட்டுகள் பறிமுதல்

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 40 ஆயிரம் சிகரெட்டுகள் பறிமுதல்

0
image

இலங்கைக்கு கடத்துவதற்காக தமிழகம் தங்கச்சிமடத்துக்கு கொண்டு வரப்பட்ட 10 இலட்சம் இந்திய ரூபாய் மதிப்பிலான 40 ஆயிரம் வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்கு கடல் வழியாக கடத்துவதற்காக மதுரையிலிருந்து 200 பெட்டிகளில் தங்கச்சிமடத்துக்கு அனுப்பப்பட்ட 40 ஆயிரம் வெளிநாட்டு சிகரெட்டுகள் சுங்க நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகளால் நேற்று (14) பறிமுதல் செய்யப்பட்டன. 

பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகள் இராமேஸ்வரம் சுங்கத் துறை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. 

பறிமுதல் செய்யப்பட்ட சிகரெட்டுகளின் மதிப்பு சுமாா் 10 இலட்சம் இந்திய ரூபாயாக இருக்கும் எனவும், பொதியில் அனுப்பிய முகவரி போலி என்பதால் பதிவு செய்யப்பட்ட அலுவலகத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கெமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து சுங்கத் துறை அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Source: https://samugammedia.com/40000-cigarettes-destined-for-smuggling-to-sri-lanka-seized-1786775840

NO COMMENTS

Exit mobile version