Home இலங்கை பூட்டை உடைக்க போராடிய திருடன்; நீண்ட நேர முயற்சியும் தோல்வி! சிசிரிவியில் பதிவான காட்சிகள்

பூட்டை உடைக்க போராடிய திருடன்; நீண்ட நேர முயற்சியும் தோல்வி! சிசிரிவியில் பதிவான காட்சிகள்

0
image

நுவரெலியா பிரதான பேருந்து நிலையத்தின் மேல் மாடியில் அமைந்துள்ள பிரபல தொலைபேசி விற்பனை நிலையம் ஒன்றை உடைத்து திருட முயன்றதாகச் சந்தேகிக்கப்படும் அடையாளம் தெரியாத நபரொருவரின் முயற்சி தோல்வியடைந்துள்ளது.

இந்தச் சம்பவம் கடந்த நேற்று வெள்ளிக்கிழமை (14) இரவு சுமார் 10.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

விற்பனை நிலையத்திற்கு வருகை தந்த சந்தேகநபர், கதவில் பொருத்தப்பட்டிருந்த பூட்டை பலவந்தமாகத் திறந்து உள்ளே நுழைய நீண்ட நேரம் முயற்சித்துள்ளார்.

எனினும், பூட்டைத் திறக்க முடியாத நிலையில், தனது முயற்சியைக் கைவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகநபர் பூட்டைத் திறக்க முயற்சிக்கும் காட்சிகள் விற்பனை நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமராக்களில் தெளிவாகப் பதிவாகியுள்ளன.

சிசிரிவி காணொளிப் பதிவுகளின் அடிப்படையில் சந்தேகநபரை அடையாளம் காண முடியும் என நம்பிக்கை வெளியிட்டுள்ள நுவரெலியா  பொலிஸார், அவரை அடையாளம் காண பொதுமக்களின் உதவியையும் கோரியுள்ளனர்.

Source: https://samugammedia.com/thief-struggled-to-break-the-lock-long-efforts-ended-in-failure-footage-recorded-on-cctv-1786776134

NO COMMENTS

Exit mobile version