Home இலங்கை மிக நீளமான சிறுநீரக கல்லை அகற்றி சாதனை படைத்த இலங்கை வைத்தியர்கள்

மிக நீளமான சிறுநீரக கல்லை அகற்றி சாதனை படைத்த இலங்கை வைத்தியர்கள்

0
image

திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 52 வயதுடைய நபர் ஒருவரின் உடலில் இருந்து 3 கிலோ 100 கிராம் எடையுள்ள மிகப்பெரிய சிறுநீரகக் கல் சத்திரசிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளது.

சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் டொக்டர் பிரகலாதன் பாலகிருஷ்ணன் தலைமையில் நேற்று (14) இந்த சத்திரசிகிச்சை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை பகுதியில் வசித்து வரும் 52 வயதுடைய நபருக்கே இந்த சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உலகளவில் இதற்கு முன்னர் 2003ஆம் ஆண்டு பிரேசில் நாட்டில் 1.9 கிலோ எடையுடைய சிறுநீரகக் கல் ஒன்று அகற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், திருகோணமலை பொது வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சையின் போது 3 கிலோ 100 கிராம் எடையுடைய சிறுநீரகக் கல் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சத்திரசிகிச்சை சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் டொக்டர் பிரகலாதன் பாலகிருஷ்ணன் தலைமையில், டொக்டர் எம்.எம். ரிஷ்லி, டொக்டர் ஜே.எம். இஹ்ஸான், டொக்டர் சீ. பிரகலாதன் மற்றும் மயக்க மருந்து வைத்திய நிபுணர் டொக்டர் அமில ஜெயக்கடு உள்ளிட்ட மருத்துவக் குழுவினரால் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை பொது வைத்தியசாலையில் இவ்வளவு அதிக எடையுடைய சிறுநீரகக் கல் ஒன்று சத்திரசிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளமை மருத்துவத் துறையில் முக்கிய சாதனையாகக் கருதப்படுகிறது.

Source: https://samugammedia.com/sri-lankan-doctors-set-a-record-by-removing-a-very-long-kidney-stone-1786772743

NO COMMENTS

Exit mobile version