Home இலங்கை இலங்கையின் புதிய இராணுவத் தளபதியாக நிலந்த பிரேமரத்ன நியமனம்

இலங்கையின் புதிய இராணுவத் தளபதியாக நிலந்த பிரேமரத்ன நியமனம்

0
image

லெப்டினன்ட் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன (Nilantha Premaratne) இலங்கை இராணுவத்தின் புதிய தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.  

இலங்கை இராணுவத்தின் 25 ஆவது தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரோட்ரிகோ தனது பதவிக்காலத்தை நிறைவு செய்ததைத் தொடர்ந்து இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கை இராணுவ பீரங்கி படையணியின் மேஜர் ஜெனரல் கே.வீ.என்.பீ. பிரேமரத்ன இராணுவத் தலைமையகத்தில் 2026 ஜுன் 01 ஆம் திகதி இராணுவத்தில் இரண்டாவது மிக உயர்ந்த பதவியாகக் கருதப்படும், இலங்கை இராணுவத்தின் 69 வது பதவி நிலை பிரதானியாக பதவியேற்றார்.

இப்பதவியை ஏற்கும் முன்னர் சிரேஷ்ட அதிகாரி பிரதிப் பதவி நிலை பிரதானியாகவும் இலங்கை இராணுவ பீரங்கி படையணியின் தற்போதைய படைத் தளபதியாகவும் அவர் பணியாற்றினார்.

Source: https://samugammedia.com/appointment-of-nihal-premaratne-as-sri-lankas-new-army-chief-1785489153

NO COMMENTS

Exit mobile version