நாட்டின் பல பகுதிகளில் இன்று மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களுடன், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
அதேவேளை, ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு, முல்லைத்தீவு மாவட்டங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு அதிகம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனுடன், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள், வடமத்திய, வடமேல் மற்றும் தெற்கு மாகாணங்கள், மேலும் திருகோணமலை மாவட்டத்திலும் மணித்தியாலத்திற்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் திடீர் மின்னல் தாக்கம் மற்றும் பலத்த காற்று காரணமாக பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்பதால், மரங்களுக்கு அடியில் தஞ்சம் புகுவதையும் திறந்த வெளிகளில் நிற்பதையும் தவிர்த்து, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
