இலங்கையில் இன்று (17) 24 கரட் தங்கத்தின் விலை பவுண் ஒன்றுக்கு 2,000 ரூபாயால் குறைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி, தற்போதைய தங்க விலை நிலவரத்தின் அடிப்படையில், 24 கரட் தங்கம் ஒரு பவுண் 374,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
அதேவேளை, 22 கரட் தங்கம் ஒரு பவுண் 344,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், 24 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 46,750 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 43,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள இந்த வீழ்ச்சி, அண்மைய நாட்களுடன் ஒப்பிடுகையில் நகை வாங்க திட்டமிட்டுள்ளோருக்கு ஓரளவு நிவாரணமாக அமைந்துள்ளது.
Source: https://samugammedia.com/gold-prices-fall-again-in-sri-lanka-today-rs-2000-drop-per-ounce-1784282491
