Home இலங்கை இலங்கை கடற்படையின் டோரா படகு கவிழ்ந்து விபத்து; ஒருவர் மாயம் – 11 பேர் மீட்பு!...

இலங்கை கடற்படையின் டோரா படகு கவிழ்ந்து விபத்து; ஒருவர் மாயம் – 11 பேர் மீட்பு! மீட்புப் பணியில் ஹெலிகொப்டர்கள்

0
image

கொழும்பு – மொறட்டுவை, அங்குலான கடற்பரப்பில் இலங்கை கடற்படைக்குச் சொந்தமான டோரா ரக படகு ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

கடற்படை பேச்சாளர் தெரிவித்ததன்படி, படகில் இருந்தவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் உடனடியாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.

படகில் இருந்த 11 பேர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒருவர் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீட்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கு இலங்கை விமானப்படையும் ஆதரவளித்து வருகிறது.

இதற்கமைய, படகை கண்காணித்து மீட்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் Mi-17 மற்றும் Bell 412 ரக இரண்டு ஹெலிகொப்டர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக விமானப்படை தெரிவித்துள்ளது.

காணாமல் போனவரைத் தேடும் நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

 

Source: https://samugammedia.com/sri-lanka-navys-dora-boat-capsizes-in-an-accident-one-person-missing—11-rescued-helicopters-involved-in-the-rescue-operation-1786788477

NO COMMENTS

Exit mobile version