மறுமலர்ச்சிக்கான வழி தேசிய திட்டத்தின் கீழ், வவுனியா உக்குளாங்குளம் பகுதியில் அமைந்துள்ள திருச்செந்தூரன் மில் வீதியை புனரமைக்கும் பணிகள் இன்று (27) ஆரம்பித்து வைக்கப்பட்டன.
கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வீதிப் புனரமைப்புக்கான பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது
நீண்டகாலமாக மிகவும் மோசமடைந்த நிலையில் காணப்பட்ட இவ்வீதியை புனரமைக்குமாறு பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க விடம் மேற்கொண்ட வேண்டுகோளுக்கமையவே இந்நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதற்காக ஒதுக்கப்பட்டுள்ள தொகை 53.2 மில்லியன் ரூபாய்களாகும் என்பதுடன், மூன்று மாத காலப்பகுதிக்குள் பணிகளை நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வீதி புனரமைக்கப்படுவதன் மூலம் உக்குளாங்குளம் மற்றும் கூமாங்குளம் உள்ளிட்ட பல கிராமங்களுக்கான போக்குவரத்து வசதிகள் மிகவும் இலகுவடையும் என்பதுடன் அப்பகுதியைச் சேர்ந்த 400 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் நேரடியாகப் பயனடைவர்.
இந்நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான எம். ஜெகதீஸ்வரன், எஸ். திலகநாதன், வவுனியா பிரதேச செயலாளர் எம். பிரதாபன், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் பிரதிநிதிகள், அரச அதிகாரிகள் மற்றும் பிரதேச வாசிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
Source: https://samugammedia.com/start-of-street-renovation-works-in-ukkulankulam-tiruchendur-1785147816
