Home இலங்கை உழவு இயந்திரம் பாவித்து கரைவலை தொழில் செய்த ஆறுபேர் கைது!

உழவு இயந்திரம் பாவித்து கரைவலை தொழில் செய்த ஆறுபேர் கைது!

0
image

யாழில் உழவு இயந்திரத்துடன் ஆறு பேர் கடற்படையால் இன்று (4)கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் சட்ட விரோதமான முறையில் உழவு இயந்திரம் பாவித்து கரைவலை தொழில் செய்த ஆறு கடற்றொழிலாளர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கடற் பகுதியில் தொடர்ச்சியாக சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்று வந்துள்ளன.

இதன் அடிப்படையில் வெற்றிலைக்கேணி கடற்படை மேற்கொண்ட விசேட நடவடிக்கையில், கட்டைக்காடு பகுதியில் சட்ட விரோதமான முறையில் உழவு இயந்திரம் பாவித்து கரைவலை தொழில் செய்த ஆறு கடற்றொழிலாளர்கள் இரண்டு உழவு இயந்திரங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள், உழவு இயந்திரம் மற்றும் ஏனைய மீன்பிடி உபகரணங்களுடன் நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக யாழ் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: https://samugammedia.com/six-people-arrested-for-using-a-plow-to-do-coastal-farming-1780579377

NO COMMENTS

Exit mobile version