Home இலங்கை ஊழல் ஒழிப்புச் சட்டத்தில் திருத்தம் – வர்த்தமானியில் வெளியான சட்டமூலம்

ஊழல் ஒழிப்புச் சட்டத்தில் திருத்தம் – வர்த்தமானியில் வெளியான சட்டமூலம்

0
image

ஊழல் ஒழிப்புச் சட்டத்தில் பல முக்கிய திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், அதற்கான திருத்தச் சட்டமூலம் விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் குறித்த ஊழல் ஒழிப்பு (திருத்தச்) சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் ஒழிப்புச் சட்டத்தைத் திருத்தும் நோக்கில் இந்தச் சட்டமூலம் நேற்று (27) விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலின்படி, தற்போதைய ஊழல் ஒழிப்புச் சட்டத்தில் பல முக்கிய மாற்றங்களை அறிமுகப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் இதில் முன்வைக்கப்பட்டுள்ளன.

குறித்த திருத்தச் சட்டமூலம் விரைவில் நாடாளுமன்றத்தில் பரிசீலனை மற்றும் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படவுள்ளது.

Source: https://samugammedia.com/amendment-to-the-anti-corruption-law–legislation-published-in-the-gazette-1785216492

NO COMMENTS

Exit mobile version