Home இலங்கை எப்போது விடிவு கிடைக்கும் லயன் குடியிருப்புகளுக்கு? சாமிமலை மக்கள் ஆதங்கம்

எப்போது விடிவு கிடைக்கும் லயன் குடியிருப்புகளுக்கு? சாமிமலை மக்கள் ஆதங்கம்

0
image

எப்போது விடிவு கிடைக்கும் லயின் குடியிருப்புகளுக்கு என ஆதங்கம் தெரிவித்துள்ளார் சாமிமலை பகுதியில் உள்ள பெருந்தோட்ட மக்கள்.

200 வருடத்திற்கு மேலாக எங்கள் பரம்பரையினர்கள் வாழ்ந்த லயன் குடியிருப்புகளில் வாழ்ந்து வரும் மலையக பெருந்தோட்ட தொழிலாளிகளையும் அவர்களின் பிள்ளைகளையும் பல்வேறு அடக்குமுறைக்கு உள்ளாக்கி வரும் பெருந்தோட்ட முறைமைக்கு எப்போது விடிவு கிடைக்கும் என்ற ஏக்கத்துடன் வாழ்ந்து வரும்  நிலையில் உள்ளனர்.

கடந்த சில நாட்களாக மத்திய மலைநாட்டில் பெய்துவரும் அடைமழை காற்று காரணமாக ஹொரண பெருந்தோட்டத்திற்கு உட்பட்ட சாமிமலை ஸ்டொக்ஹோம் பிரிவில் சில வீடுகளிற்கு மண்சரிவுகளும் 9 வது இலக்க லயன் கூடியிருப்பு வீடுகளில் காற்று காரணமாக கூரை தகரங்கள் மிகவும் மோசமான நிலையில் பாதிக்கப்பட்டுள்ளது .

இதன் காரணமாக இந்த லயன் குடியிருப்பில் வாழும் 9 குடும்பங்களில் வாழும் 43பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு பாடசாலை செல்லும் 13 மாணவர்களும் தோட்டத்தில் தொழில் புரியும் தொழிலாளர்களும் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

இது தொடர்பாக பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்திற்கும் தோட்ட நிர்வாகத்திற்கும்  அறிவித்தும் இன்னும் நிரந்தர தீர்வு கிடைக்கவில்லை. அத்தோடு கடந்த பல வருடங்களாக ஸ்டொக்ஹோம் தோட்ட நிர்வாகம் மற்றும் சேமநல உத்தியோகஸ்தர் அவர்களும் வெளிக்கள உத்தியோகஸ்தர் அவர்களும் தோட்டத்தில் வேலை செய்கின்றவர்கள், வேலை இல்லாதவர்கள் என்ற பிரிவினையை ஏற்படுத்தி அதிலும் அவர்களுக்கு சார்பான. தொழிலாளர்கள்.சார்பு அல்லாத தொழிலாளர்கள் என்ற பிரிவினையையும் ஏற்படுத்தி பலரை  தோட்டத்தில் வேலையில்  இருந்து நீக்கியும் இன்னும் சிலரை பழிவாங்குவதற்கும் செயற்பட்டு வருகின்றார்கள்.

அத்தோடு கூரை தகரம் பாதிக்கப்பட்டவர்கள் கோரிய போது தோட்டத்தில் வேலை செய்யும் குடும்பங்களுக்கு  எட்டு பழைய  தகரங்கள் வீதம்வழங்கிவிட்டு வேலைசெய்து ஓய்ஊதியம் பெற்ற நிலையில் வாழும் குடுங்களுக்கு இத்தகரங்களை வழங்க முடியாது என தோட்ட சேமநல உத்தியோகஸ்தர் மற்றும் வெளிகள உத்தியோகஸ்தரும் அச்சுறுத்தியும் பொலிஸ் முறைப்பாடுகளை செய்து அடக்குமுறைகளை ஏற்படுத்தி வருகின்றார்கள்.

இவ்விடயம் தொடர்பாக ஹொரண பெருந்தோட்ட கம்பனியின் பணிப்பாளர், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியம்,பெருந்தோட்ட சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர். மற்றும் பெருந்தோட்ட சமூக உட்கட்டமைப்பு அவிருத்தி அமைச்சரும் கவனம் செலுத்தி உரிய தீர்வினை பெற்று தருமாறு பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் கோரிக்கையை முன்வைக்கின்றனர்.

Source: https://samugammedia.com/when-will-relief-come-for-the-estate-quarters-the-anguish-of-the-people-of-samimalai-1786341915

NO COMMENTS

Exit mobile version