Home இலங்கை ஒக்டோபர் முதலாம் திகதி முதல் கட்டாயமாகும் நடைமுறை! இறைவரித் திணைக்களத்தின் அறிவிப்பு

ஒக்டோபர் முதலாம் திகதி முதல் கட்டாயமாகும் நடைமுறை! இறைவரித் திணைக்களத்தின் அறிவிப்பு

0
image

திருத்தப்பட்ட பெறுமதி சேர் வரி (VAT) இன்வொய்ஸ் படிவம் எதிர்வரும் ஒக்டோபர் 1ஆம் திகதி முதல் கட்டாயமாக அமுல்படுத்தப்படும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

டிஜிட்டல் வரி வசூலிப்பு முறையை சீரமைப்பதுடன், வரி வலையமைப்பின் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும் நோக்கில் இந்த புதிய இன்வொய்ஸ் வடிவம் கடந்த மார்ச் 27ஆம் திகதி அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த புதிய இன்வொய்ஸ் படிவத்தை ஜூலை 1ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், வர்த்தக சமூகத்தினரும் வரி செலுத்துவோரும் தங்களது கணினி மற்றும் வணிக அமைப்புகளை அதற்கேற்ப தயார்படுத்திக் கொள்வதற்காக மேலதிக கால அவகாசம் வழங்கும் வகையில் அமுலாக்கத் திகதி ஒத்திவைக்கப்பட்டது.

இதற்கமைய, திருத்தப்பட்ட VAT இன்வொய்ஸ் படிவம் ஒக்டோபர் 1ஆம் திகதி முதல் கட்டாயமாக்கப்படவுள்ளது.

இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலும் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

போலி இன்வொய்ஸ்களின் பயன்பாட்டை தடுப்பது, பரிவர்த்தனைகளை உடனுக்குடன் கண்காணிக்கும் திறனை மேம்படுத்துவது மற்றும் வரி கசிவைக் குறைப்பது ஆகியவை இந்த புதிய முறையின் பிரதான நோக்கங்களாகும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Source: https://samugammedia.com/mandatory-procedure-starting-from-the-first-of-october-announcement-from-the-department-of-lord-1786875556

NO COMMENTS

Exit mobile version