Home இலங்கை “ஒரு மணி நேரத்தில் கணக்கு முடக்கம்!” – இந்த செய்தி வந்தால் உஷார்; மத்திய வங்கி...

“ஒரு மணி நேரத்தில் கணக்கு முடக்கம்!” – இந்த செய்தி வந்தால் உஷார்; மத்திய வங்கி எச்சரிக்கை

0
image

அவசரம் இருப்பது போன்ற ஒரு போலி உணர்வை ஏற்படுத்தி, பொதுமக்களை ஏமாற்றி அவர்களின் தனிப்பட்ட மற்றும் நிதித் தகவல்களைப் பெற முயலும் இணையவழி மோசடிகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு இலங்கை மத்திய வங்கி (CBSL) அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.

 ‘மோசடிக்கு ஆளாகாதீர்கள்’ என்ற விழிப்புணர்வுப் பிரசாரத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு மணி நேரத்தில் உங்கள் கணக்கு முடக்கப்படும் என்பது போன்ற பீதியூட்டும் செய்திகளை அனுப்பி, மோசடிக்காரர்கள் மக்களைச் சிந்திப்பதற்கு அவகாசம் தராமல் அவசர அவசரமாகச் செயல்படத் தூண்டுகிறார்கள் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நிதி மோசடிகளைப் பொறுத்தவரை, ‘அவசரம்’ என்பது மிக முக்கியமான ஒரு எச்சரிக்கை அறிகுறியாகும்.

மோசடிக்காரர்கள் பொதுமக்களின் பயத்தையும் பதற்றத்தையும் சாதகமாகப் பயன்படுத்தி, அவர்களை அவசரப்பட்டு தவறான முடிவுகளை எடுக்க வைக்கிறார்கள் என்று மத்திய வங்கி வலியுறுத்தியுள்ளது.

எனவே, வங்கிக் கணக்குகள், பணப் பரிவர்த்தனைகள் அல்லது தனிப்பட்ட தகவல்கள் தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கூறி வரும் எதிர்பாராத செய்திகள் மற்றும் அழைப்புகள் குறித்து பொதுமக்கள் நிதானமாகச் சிந்தித்து, அவற்றைச் சரிபார்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Source: https://samugammedia.com/account-will-be-blocked-in-one-hour–be-cautious-if-you-get-this-message-central-bank-warning-1783491569

NO COMMENTS

Exit mobile version