Home இலங்கை கடற்தொழிலாளியின் வீடு குறிவைப்பு துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்திய வாகனம் மீட்பு

கடற்தொழிலாளியின் வீடு குறிவைப்பு துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்திய வாகனம் மீட்பு

0
image

மாத்தறை, தேவேந்திரமுனை விகாரைக்கு அருகில் அமைந்துள்ள வீடொன்றின் மீது இனந்தெரியாத துப்பாக்கிதாரியொருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டுத் தப்பிச் சென்ற கார் திக்வெல்ல பகுதியில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

நேற்று (22) இரவு புதிய பெலியத்த வீதியில் கார் ஒன்று நிறுத்தப்பட்டிருந்த நிலையில், அதனைச் சோதனையிட முற்பட்ட போது, அதன் சாரதி காரை அங்கிருந்து உடன் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

பின்னர் குறித்த கார் வடிகானொன்றில் வீழ்ந்து நின்றதாகவும், இதன்போது சாரதி தப்பிச் சென்றுள்ளதாகவும் ‘அத தெரண’ செய்திச் சேவை வினவலின் போது பொலிஸார் தெரிவித்தனர். 

இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், குறித்த காரானது தேவேந்திரமுனை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்குப் பயன்படுத்தப்பட்ட கார் என்பது பொலிஸாரால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

நேற்று அதிகாலை காரொன்றில் வந்த குழுவொன்று, தேவேந்திரமுனை கந்தர பகுதியில் உள்ள வீடொன்றின் மீது கைத்துப்பாக்கி மூலம் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டுத் தப்பிச் சென்றிருந்தது. 

கடற் தொழிலில் ஈடுபடும் நபரொருவரின் வீட்டின் மீதே இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Source: https://samugammedia.com/fishermans-house-targeted-vehicle-used-in-shooting-recovered-1784782602

NO COMMENTS

Exit mobile version