Home இலங்கை கடல் அலைகள் 2.5 மீட்டர் வரை உயரும் அபாயம் – பலத்த காற்று, மழை எச்சரிக்கை

கடல் அலைகள் 2.5 மீட்டர் வரை உயரும் அபாயம் – பலத்த காற்று, மழை எச்சரிக்கை

0
image

சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இன்று (13) மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. 

மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என்பதுடன் நாட்டின் ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. 

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், மொனராகலை, ஹம்பாந்தோட்டை, திருகோணமலை மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு  40-50  கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். 

இதேவேளை நீர்கொழும்பிலிருந்து கொழும்பு ஊடாக காலி வரையான கடற்பரப்புகளில் சிறிதளவு மழை பெய்யக்கூடும். 

காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசுவதுடன், காற்றின் வேகமானது மணிக்கு 30-40 கிலோமீற்றராகக் காணப்படும். 

சிலாபத்திலிருந்து புத்தளம் ஊடாக காங்கேசன்துறை வரையான மற்றும் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணிக்கு 50-60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக் கூடும். 

நாட்டைச் சுற்றியுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணிக்கு 50 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக் கூடும். 

சிலாபத்திலிருந்து புத்தளம் ஊடாக காங்கேசன்துறை வரையான மற்றும் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும். நாட்டைச் சுற்றியுள்ள ஏனைய கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படலாம். 

புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் கடல் அலைகளின் உயரம் சுமார் 2.0 – 2.5 மீற்றர் வரை உயரக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Source: https://samugammedia.com/danger-of-sea-waves-rising-up-to-25-meters—strong-wind-and-rain-warning-1783914735

NO COMMENTS

Exit mobile version