Home இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சிக்கிய இளைஞன்!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சிக்கிய இளைஞன்!

0
image

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகக் கூறப்படும் 10,800 வெளிநாட்டு சிகரெட் குச்சிகளுடன் 22 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் கட்டுநாயக்க விமான நிலைய துணைப் பிரிவு அதிகாரிகள், அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (15) விமான நிலையத்தின் வருகைப் பகுதியில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போதே குறித்த நபரை கைது செய்துள்ளனர்.

இதன்போது, 54 பெட்டிகளில் அடைக்கப்பட்டிருந்த 10,800 சிகரெட் குச்சிகள் சந்தேக நபரிடமிருந்து கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் உஹுமிய (Uhumiya) பகுதியைச் சேர்ந்தவர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Source: https://samugammedia.com/young-man-caught-with-foreign-cigarettes-at-katunayake-airport-1786859992

NO COMMENTS

Exit mobile version