தனது காணியினில் குவித்து வைக்கப்பட்டிருந்த கட்டுமான மணலை புகைப்படம் எடுத்ததாக பிரதேசசபை உறுப்பினருக்கு எதிராக காணி உரிமையாளரால் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது
அதனை தொடர்ந்து இன்றைய தினம் சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் மயூரன் பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் ஒன்றினை வழங்கியுள்ளார் அதனைத்தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்
தென்மராட்சி பிரதேச செயலர் பிரிவுக்குற்பட்ட. கெற்பெலி பகுதியில் அதிகளவான கட்டுமான மண்ணினை தனி நபர் ஒருவர் ஏற்றுவதாக பிரதேச மக்கள் மற்றும் சமுகமட்ட அமைப்பினர் கெற்பெலி பிரதேச வட்டார உறுப்பினர் என்ற வகையில் எனக்கு தெரியப்படுத்தியிருந்தனர்
அதனை தெடர்ந்து குறித்த பிரதேசத்திற்கு நேரில் சென்ற போது தனி நபர் ஒருவரது காணியினில் பெருமளவான கட்டுமான மணல் குவிக்கப்பட்டிருந்தது
உடனடியாக தென்மராட்சி பிரதேச செயலர் மற்றும் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் ஆகியோரை தொடர்பு கொண்டு கேட்டபோது
மணல் ஏற்றுவதற்கான அனுமதியினை பிரதேச செயலகம் ஊடாக குறித்த நபருக்கு வழங்கவில்லை எனவும் கனியவளத்திணைக்களத்தால் நேரடியாக வழங்கப்பட்டதாகவும் அதனை தம்மால் தடுத்து நிறுத்தமுடியவில்லை என தெரிவித்தனர்
உண்மையில் எமது தென்மராட்சி பிரதேச செயலர் பிரிவுற்குற்பட்ட மக்களின் கட்டுமானத்திற்கு மாதத்திற்கு 100கியூப் மணல் அகழ்விற்கே அனுமதி வழங்கப்பட்டு வருகின்றது அந்த அளவு போதாது 50கியுப் மணல் அனுமதியினை மாதத்திற்கு மேலதிகமாக வழங்குமாறு கடந்த பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கனியவள திணைக்களத்திடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது ஆனால் அந்த கோரிக்கைக்கு இதுவரை பதில் வழங்காது தனி நபர் ஒருவருக்கு வியாபார நோக்கத்திற்காக 300. கியுப் மணல் அனுமதியினை கனியவளத்திணைக்களம் வழங்கியுள்ளது
இந்த நிலையில் ஒருங்கிணைப்புக்குழு தலைவருக்கு அனுப்புவதற்காகவே குறித்த மணல் குவியல்களை புகைப்படம் எடுத்ததாகவும் எமது பிரதேச கனிய வளங்களை தனி நபர்கள் வியாபார நோக்கத்திற்காக சுரண்டுவதற்கு தான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன் அதற்காக நீதிமன்றம் வரை செல்ல தயார் என தெரிவித்தார்
