Home இலங்கை கண்டி இந்திய உதவி உயர் ஸ்தானிகருடனான கலந்துரையாடல்!

கண்டி இந்திய உதவி உயர் ஸ்தானிகருடனான கலந்துரையாடல்!

0
image

கண்டி இந்திய உதவி உயர் ஸ்தானிகர்  சரண்யா வி.கே.எஸ் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நேற்று மாலை 3.30 மணிக்கு நடத்தினார்.

இந்த நிகழ்வு கண்டி இந்திய உதவி தூதரக கேட்போர் கூடத்தில் உதவி உயர் ஸ்தானிகர் சரண்யா வி.கே.எஸ் தலைமையில் நடைபெற்றது.

நுவரெலியா, கண்டி, மாத்தளை மாவட்டத்தைச் சேர்ந்த தெரிவுசெய்யப்பட்ட 20 ஊடகவியலாளர்கள் இச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

உதவி இந்திய ஸ்தானிகர்  சரண்யா வி.கே.எஸ் அங்கு பேசிய போது கடந்த 30 ஆண்டுகளில் இந்திய நாட்டின் வளர்ச்சி பற்றிய விபரங்கள் எடுத்து கூறினார்.

இந்தியா இலங்கை அன்டை நாடாகவும் நட்பு நாடாகவும் இருந்து வருகிறது எமது இந்திய அரசு இலங்கைக்கு பல்வேறு வகையான உதவிகளை அவ்வப்போது வழங்கிவருகிறது.

அத்துடன் பெருந்தோட்ட பகுதிகளில் 10000 வீடமைப்பு திட்டம், வைத்திய சாலை திட்டம், பாடசாலைகள் அமைக்கும் திட்டம், போன்ற பல்வேறு அபிவிருத்தி வேலைகளுக்கு உதவி வருகிறது.

குறிப்பாக 10000 ஆயிரம் வீடமைப்பு திட்டத்தில் 1300 வீடுகளுக்கான பணிகள் இறுதி கட்டத்தை எட்டி நிலையில் உள்ளது.

2017 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த திட்டம் பல சவால்களை சந்திக்க நேரிட்டு தற்போது வேகமாக பணி இடம்பெற்ற நிலையில் உள்ளது.

10000 வீட்டு திட்டம் 2017 ல் ஆரம்பித்தாலும் பல்வேறு உலகலாவிய இயற்கை அனர்த்தங்கள் காரணமாக தாமதமானது 

குறிப்பாக 2019 ம் ஆண்டில் கொவிட் 19 , 2022 பொருளாதார நெருக்கடி, இதன் பின்னர் 2023 ல் நாடு நெருக்கடியில் இருந்து மீள முடிந்தது.

எது எப்படியோ எங்கள் இந்திய அரசு மேற்கொண்டு வரும் 10000 வீட்டு திட்டம் மற்றும் ஏனைய அனைத்து திட்டங்களையும் எமது இந்திய பிரதமர் நரேந்திர மோடி அரசு மேற்கொண்டு வரும்.

10000 வீட்டு திட்டத்தில் 1300 வீடுகள் கட்டி முடிக்கப்பட்ட நிலையில் உள்ளது.மேலும் 2025 ஆம் ஆண்டு 4000 வீடுகள் அமைப்பதற்கு முன்வைக்கப்பட்டது. 

அதன்படி தற்போது அதற்கான வேலைத்திட்டங்கள் மும்முரமாக நடந்து வருகிறது.இந்த வேலை திட்டம் இலங்கை அரசுடன் இணைந்து செயல்பட உள்ளோம் என்று  இந்திய உதவி உயர் ஸ்தானிகர் அதி மேதகு சரண்யா தெரிவித்தார். 

Source: https://samugammedia.com/discussion-with-the-assistant-high-commissioner-of-india-in-kandy-1782994897

NO COMMENTS

Exit mobile version