பசுபிக் பிராந்தியத்தில் நிலை கொண்டுள்ள “எல் நினோ” இலங்கையில் எதிர்வரும் 20ஆம் திகதி முதல் செப்டெம்பர் வரையான காலப்பகுதியில் மிகக் கடுமையாகத் தாக்கும் என்று யாழ். பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா எச்சரித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தைச்சேர்ந்த கமக்காரர் அமைப்பு மற்றும் மீனவசங்கங்களின் பிரதிநிதிகளுக்கு எல்நினோ தொடர்பான கலந்துரையாடல் கிளிநொச்சியில் இடம்பெற்றது.
இதில் கலந்துகொண்டு ஏற்படப்போகும் எல்நினோ நிலையை எவ்வாறு எதிர்கொள்வது தொடர்பாக விளக்கமளிக்கையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
குறித்த கலந்துரையாடலில் மாவட்ட அரசாங்கதிபர் எஸ்.முரளிதரன், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவிப்பணிப்பாளர் K.அழகக்கோன், பெண்கள் வாழ்வுரிமைச்சங்கத்தின் இணைப்பாளர் வல்லிபுரம் வாசுகி, கமக்காரர் அமைப்புக்களின் பிரதிநிதிகள், மீனவசங்க பிரதிநிதிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
