Home இலங்கை கண்டி தலதா பெரஹெரவில் அரங்கேறிய முக்கிய நிகழ்வு

கண்டி தலதா பெரஹெரவில் அரங்கேறிய முக்கிய நிகழ்வு

0
image

2026ஆம் ஆண்டுக்கான வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி தலதா மாளிகையின் எசல பெரஹெரவின் இரண்டாவது கும்பல் பெரஹெர நேற்று (19) இரவு வெகுவிமரிசையாக நடைபெற்றது.

இலங்கை கலாச்சாரத்தின் பெருமையை உலகிற்கு எடுத்துக்காட்டும் 1716ஆவது தலதா பெரஹெர, நேற்று மாலை 6.41 மணிக்கு சுபவேளையில் வீதியுலாவை ஆரம்பித்தது.

இந்த பெரஹெரவில் 25 ஆண்டுகளுக்குப் பின்னர், புனித தந்த தாதுவை சுமந்து செல்லும் அரிய வாய்ப்பு தலதா மாளிகையின் ‘ஜனராஜா’ யானைக்கு கிடைத்தது.

ஜனராஜா யானையின் இருபுறங்களிலும் ‘மியன் ராஜா’ மற்றும் ‘சிங்க ராஜா’ ஆகிய யானைகள் அணிவகுத்துச் சென்றன.

தலதா மாளிகைக்கு அருகில் ஆரம்பமான பெரஹெர, நான்கு மகா தேவாலய பெரஹெரக்களையும் இணைத்துக்கொண்டு லேக் வீதி, தலதா வீதி, டி.எஸ். சேனநாயக்க வீதி மற்றும் ராஜா வீதி வழியாகச் சென்று மீண்டும் தலதா மாளிகையை வந்தடைந்தது.

இந்நிலையில், மூன்றாவது கும்பல் பெரஹெர இன்று (20) இரவு வீதியுலா வரவுள்ளது

Source: https://samugammedia.com/the-main-event-staged-at-the-kandy-thalatha-perahera-1787190689

NO COMMENTS

Exit mobile version