Home இலங்கை பொருளாதாரம் அரசாங்கம் எடுத்துள்ள முக்கிய டொலர் திரட்டும் முயற்சி

அரசாங்கம் எடுத்துள்ள முக்கிய டொலர் திரட்டும் முயற்சி

0

2022 ஆம் ஆண்டு இலங்கை திவால்நிலையை அறிவித்த பிறகு முதல் முறையாக, உள்ளூர்
வணிக வங்கிகளிடமிருந்து மாத்திரம் டொலர்களை திரட்ட தீர்மானித்துள்ளது.

இதற்காக அரசாங்கம் 50
மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள உள்நாட்டு டொலர் பத்திரத்தை
வெளியிட்டுள்ளது.

  

முதிர்வு காலம் ஒன்று முதல் மூன்று ஆண்டுகள் வரை இருப்பதால், பத்திரத்தின்
வட்டி விகிதம் போட்டி ஏலம் மூலம் தீர்மானிக்கப்படும் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.

உரிமம் பெற்ற வணிக வங்கிகள் 

இந்த நிலையில் 2025 டிசம்பர் 3 முதல் 10 வரை உள்ளூரில் இணைக்கப்பட்ட உரிமம்
பெற்ற வணிக வங்கிகள் இந்த செயற்பாட்டில் ஈடுபடமுடியும் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.

  

2017 ஆம் ஆண்டின் அந்நிய செலாவணி சட்டத்தின் அடிப்படையில் மத்திய வங்கியின்
அனுமதியைப் பெற்ற பிறகு, திறைசேரி கடந்த வெள்ளிக்கிழமை டொலர் பத்திர அறிவிப்பை
வெளியிட்டது.

நிதி அமைச்சகத்தின் புதிதாக அமைக்கப்பட்ட பொது கடன் முகாமை அலுவலகம், அக்டோபர்
13 அன்று ஜனாதிபதி திசாநாயக்க சமர்ப்பித்த ஒரு ஆவணத்தின் அடிப்படையில்
எடுக்கப்பட்ட அமைச்சரவை முடிவைத் தொடர்ந்து கடன் ஆவணத்திற்கான இந்த அறிவிப்பு
வெளியிட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version