Home இந்தியா தி.மு.க வின் கொள்கையே கொள்ளை தான்: விஜய் ஆதங்கம்!

தி.மு.க வின் கொள்கையே கொள்ளை தான்: விஜய் ஆதங்கம்!

0

தி.மு.க வின் கொள்கையே கொள்ளை தான் என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் குற்றம் சுமத்தியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் கரூர் பிரசார கூட்டத்தில் இடம்பெற்ற இழப்பையடுத்து முதற் தடவையாக இன்றைய தினம் (23.11.2025) காஞ்சிபுரத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 2026ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் த.வெ.க ஆட்சி அமைவது உறுதி எனவும் அவர் உறுதியாக தெரிவித்துள்ளார்.

மக்கள் பிரச்சினை

இதன்போது மேலும் உரையாற்றிய அவர்,

“மக்களின் பிரச்சினைகளைப் பேசும்போது தற்போது ஆட்சியில் இருப்பவர்களுக்கு த.வெ.க மீது ஒரு கோபம் வருகிறது. அனைத்து மேடைகளிலும் த.வெ.க பற்றி அவதூறு பேசுகிறார்கள். இதற்கெல்லாம் நாங்கள் பதில் சொல்வோம்.

கரூர் பற்றி நான் பேசுவேன் என்று எதிர்பார்க்கிறார்கள். நான் கண்டிப்பாக பேசுவேன்.

தமிழ்நாட்டில் மக்களுக்கான ஆட்சியை மக்கள் வரவைப்பார்கள்.

2026 ஆம் ஆண்டில் த.வெ.க ஆட்சி அமையும்.

தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகள் விரிவாக இடம்பெறும்.

மக்கள் கேள்விக்குறியல்ல மாற்றத்திற்கான ஆச்சரியக்குறி.

நான் அரசியலுக்கு வந்தது மக்களுக்கு நல்லது செய்ய மட்டுமே. சொன்னால் அதைச் செய்யாமல் விடமாட்டேன். குறிவைத்தால் தவற விடமாட்டேன்.

மீண்டும் சொல்கிறேன் எதிர்வரும் தேர்தலில் தி.மு.கவுக்கும் த.வெ.கவுக்கும் இடையே தான் போட்டி. வெற்றி நிச்சயம்” என தெரிவித்துள்ளளார்.

NO COMMENTS

Exit mobile version