Home இலங்கை காஞ்சிபானி இம்ரானின் நெருங்கிய உறவினர் துப்பாக்கிச் சூட்டில் பலி – மாளிகாவத்தையில் பரபரப்பு

காஞ்சிபானி இம்ரானின் நெருங்கிய உறவினர் துப்பாக்கிச் சூட்டில் பலி – மாளிகாவத்தையில் பரபரப்பு

0
image

கொழும்பு, மாளிகாவத்தை – சங்கராஜ மாவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாளிகாவத்தையில் உள்ள பீ.சி.சி. பாலத்திற்கு அருகில் இன்று (10) இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில், மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் கட்டுமானப் பொருட்கள் விற்பனை நிலையமொன்றின் உரிமையாளர் எனவும், திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் காஞ்சிபானி இம்ரானின் நெருங்கிய உறவினர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட சந்தேகநபர்கள் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ள நிலையில், அவர்களை கைது செய்வதற்காக பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

photo 

Source: https://samugammedia.com/k-kanjibani-a-close-relative-of-imran-killed-in-a-shooting—commotion-in-maligawaththa-1786354273

NO COMMENTS

Exit mobile version